'பிக் பாக்கெட்' ஆசாமிகள் 3 பேர் கைது

‘பிக் பாக்கெட்’ ஆசாமிகள் 3 பேர் கைது;

Update:2023-03-07 00:15 IST

கூடலூர்

கூடலூர் பகுதியை சேர்ந்தவர் இப்ராஹிம் குட்டி. இவர் வெளியூர் செல்வதற்காக பஸ் நிலையம் வந்தார். அப்போது அவரது பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.9 ஆயிரம் மாயமானது. இதுகுறித்து கூடலூர் போலிசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள், சப்-இன்ஸ்பெக்டர் இப்ராஹிம் உள்ளிட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையில் கூடலூர் பஸ் நிலையத்தில் சந்தேகப்படும்படி நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள், கேரள மாநிலம் வழிக்கடவு தாமரைசேரி பகுதியை சேர்ந்த நஜீப் (வயது 41), சிராஜீதின் (31), அப்துல் சலாம் (46) ஆகியோர் என்பதும், இப்ராஹிம்குட்டியிடம் பணத்தை பிக் பாக்கெட் அடித்ததும் தெரி வந்தது. பின்னர் அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்