3 அரசு பஸ்கள் ஜப்தி

3 அரசு பஸ்கள் ஜப்தி

Update: 2023-04-25 18:45 GMT

மேட்டுப்பாளையம்

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 32), பெயிண்டர். இவருடைய மனைவி பிரியா (28). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் பாஸ்கர் மேட்டுப்பாளையம் பகுதியில் தங்கியிருந்து பெயிண்டிங் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு 26-ந் தேதி ஏப்ரல் மாதம் 26-ந் தேதி பாஸ்கர் தனது நண்பர் மகேஷ்குமாருடன் மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

பொகளூர் அருகே வந்தபோது, அந்த வழியாக வந்த அரசு பஸ் மோதியதில் பாஸ்கர், மகேஷ்குமார் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.இதனைத்தொடர்ந்து இழப்பீடு கேட்டு பிரியா தனது குழந்தைகளுடன் மேட்டுப்பாளையம் சார்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.கே.சிவகுமார், இறந்த பாஸ்கரனின் குடும்பத்திற்கு ரூ.28 லட்சத்து 53 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டார். ஆனால் பாஸ்கரனின் குடும்பத்திற்கு இழப்பீடு தொகையை வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் மனுதாரர்கள், கோர்ட்டில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.கே.சிவகுமார், அரசு விபத்து இழப்பீடு வழங்காததால் 3 அரசு பஸ்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து கோர்ட்டு அலுவலர் எஸ்.முனிராஜ் மற்றும் வக்கீல்கள் நேற்று காலை 7 மணிக்கு மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் சென்று மேட்டுப்பாளையம்- கூடலூர், மேட்டுப்பாளையம்- தேனி மேட்டுப்பாளையம்- திருச்சி ஆகிய வழித்தடங்களில் செல்லும் 3 பஸ்களை ஜப்தி செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்