எலக்ட்ரீசியன் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது

திருச்செங்கோடு அருகே எலக்ட்ரீசியன் கொலை வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-12-23 18:45 GMT

எலச்சிபாளையம்

திருச்செங்கோடு அருகே கோழிக்கால்நத்தத்தை சேர்ந்த ஆரோன் மகன் தேவராஜ் என்ற தேவா (வயது 32). எலக்ட்ரீசியன். இவர் கடந்த 20-ந் தேதி இரவு மர்மநபர்களால் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக திருச்செங்கோடு ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். கொலையுண்ட தேவா செல்போன் எண்ணில் யாரெல்லாம் பேசினார்கள் என்ற விவரங்களை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், தேவராஜின் மனைவி சரண்யா, தன்னுடைய கள்ளக்காதலனுடன் சேர்ந்து இந்த கொலையை அரங்கேற்றி இருப்பது தெரிய வந்துள்ளது. இதைதொடர்ந்து தேவராஜின் மனைவி சரண்யா, கள்ளக்காதலன் விமல்குமார், அவருடைய நண்பர் கோபாலகிருஷ்ணன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து தேவராஜ் கொலையில் தொடர்புடைய கூலிப்படையினரை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் சங்ககிரி புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த அன்பரசு (29), டிரைவர் சக்திவேல் (25), சென்ட்ரிங் தொழிலாளி பார்த்திபன் (29) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதுவரை 6 பேரை கைது செய்து உள்ள நிலையில் தேவராஜ் கொலையில் மேலும் கொலையாளிகளை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்