ஆன்லைனில் லாட்டரி விற்ற 3 பேர் கைது

பரமத்திவேலூரில் ஆன்லைனில் லாட்டரி விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-02-27 00:15 IST

பரமத்திவேலூர்

பரமத்திவேலூர், பஸ் நிலையம் அருகே உள்ள காம்ப்ளக்ஸில் சிலர் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை செய்து வருவதாக பரமத்தி வேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் மற்றும் இன்ஸ்பெக்டர் இந்திராணி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு ஆன்லைன் மூலம் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை செய்த பரமத்திவேலூர் தெற்கு தெருவை சேர்ந்த வடிவேல் (வயது 42), விஜய் (24), சுல்தான்பேட்டை சேர்ந்த மோகன்குமார் (33) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் 5 செல்போன்கள், ரூ.60 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றையும் பரமத்திவேலூர் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்