மோட்டார்சைக்கிளுக்கு தீ வைத்த 3 பேர் கைது
மோட்டார்சைக்கிளுக்கு தீ வைத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;
கமுதி,
கமுதியை அடுத்து கீழே கொடுமனூர் கிராமத்தை சேர்ந்தவர் நாகூரான்(வயது 56). சம்பவத்தன்று இவர் தனது மோட்டார்சைக்கிளை வீட்டுக்கு வெளியே நிறுத்திவிட்டு தூங்க சென்றார். மறுநாள் காலையில் பார்த்தபோது மோட்டார்சைக்கிள் தீயில் எரிந்து சேதமாகி இருந்தது. மர்மநபர்கள் தீ வைத்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அபிராமம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் முன்விரோதம் காரணமாக அதை ஊரை சேர்ந்த ராஜகோபால்(34), நாகராஜ்(49), அருள்பாண்டியன்(25) ஆகியோர் மோட்டார்சைக்கிளுக்கு தீ வைத்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.