கஞ்சா விற்ற 3 பேர் சிக்கினர்

கோவையில் கஞ்சா விற்ற 3 பேர் சிக்கினர்;

Update:2023-06-11 01:00 IST

கோவை

கோவை பொன்னைய ராஜபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் பொன்னையராஜபுரம் ஏ.கே.எஸ். நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்த தூத்துக்குடி மாவட்டம் சவேரியார்புரத்தை சேர்ந்த மகாராஜா (வயது23), வடவள்ளி முதலியார்வீதியை சேர்ந்த மதியழகன் (23), நவமணி (20) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 3 பேரும் நகரின் பல்வேறு இடங்களில் கஞ்சாவை பொட்டலமாக போட்டு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

Tags:    

மேலும் செய்திகள்