தட்டச்சு தேர்வில் 3 ஆயிரம் பேர் பங்கேற்பு

திண்டுக்கல், பழனியில் நடந்த தட்டச்சு தேர்வில் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.;

Update:2023-08-27 01:45 IST

தமிழ்நாடு அரசு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி, ஆகஸ்டு மாதங்களில் தட்டச்சு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று மாநிலம் முழுவதும் தட்டச்சு தேர்வு தொடங்கியது. தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 20 ஆயிரம் பேர் தட்டச்சு தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர்.

இவர்களுக்கு மாவட்டந்தோறும் அரசு, தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 106 தட்டச்சு பயிற்சி மையங்களில் பயின்ற 5 ஆயிரத்து 723 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்கு திண்டுக்கல், பழனியில் 5 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.

முதல் நாளான நேற்று ஜூனியர் மற்றும் சீனியர் ஆகிய 2 பிரிவுகளில் தமிழ், ஆங்கில தட்டச்சு தேர்வு நடைபெற்றது. இதில் ஜூனியர் தட்டச்சு தேர்வில் 2 ஆயிரத்து 76 பேரும், சீனியர் தட்டச்சு தேர்வில் 1,005 பேரும் என மொத்தம் 3 ஆயிரத்து 81 பேர் நேற்று தட்டச்சு தேர்வில் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து மீதமுள்ள 2 ஆயிரத்து 642 பேருக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) தேர்வு நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்