திருமணமான 3 வாரத்தில் புதுப்பெண் மாயம்
திருமணமான 3 வாரத்தில் புதுப்பெண் மாயமானார்.;
திருச்சி உறையூர் மேல பாண்டமங்கலத்தை சேர்ந்தவர் கரிகாலன் (வயது 35). இவர் கலைவாணி (23) என்ற பெண்ணை காதலித்து வந்தார். கடந்த மாதம் 17-ந்தேதி இருவரும் திண்டுக்கல் சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்துகொண்டனர். உறையூரில் குடும்பம் நடத்தி வந்த இவர்களுக்கு கடந்த 14-ந்தேதி திருமண வரவேற்பு நடத்த உறவினர்கள் திட்டமிட்டு இருந்தனர்.
இந்தநிலையில் கடந்த 8-ந்தேதி காலை திருமண வரவேற்பு அழைப்பிதழ் கொடுக்க கரிகாலன் சென்றுவிட்டார். மதியம் வந்து பார்த்த போது, கலைவாணியை காணவில்லை. அக்கம்பக்கத்திலும், உறவினர்கள் வீடுகளிலும் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்று தெரியவில்லை. இதைத்தொடர்ந்து தன்னுடைய மனைவியை காணவில்லை என்றும், அவரை கண்டுபிடித்து தரும்படி மதுரை ஐகோர்ட்டில் கரிகாலன் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உறையூர் போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருமணமாகி 3 வாரத்தில் மாயமான புதுப்பெண்ணை தேடி வருகிறார்கள்.