பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில்358 மனுக்கள் பெறப்பட்டன

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில்358 மனுக்கள் பெறப்பட்டன.

Update: 2023-07-24 18:45 GMT

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, விதவை உதவித்தொகை, சாலை வசதி, ஆதரவற்றோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 358 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். இதையடுத்து அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவிட்டார்.

பின்னர் ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியம் இளையனார்குப்பம் ஊராட்சி செயலாளர் இறந்ததை அடுத்து, அவரது மகனுக்கு கருணை அடிப்படையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் உதவியாளர் பணிக்கான நியமன ஆணையை கலெக்டர் வழங்கினார். தொடர்ந்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 9 பேருக்கு தலா ரூ.4,180 மதிப்பில் இலவச சலவை பெட்டியும். அதன் பின்னர் மனவளர்ச்சி குன்றிய 11 வயது சிறுமிக்கு ரூ.9 ஆயிரம் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட சிறப்பு சக்கர நாற்காலியையும் கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கவியரசு மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்