சோலைமலை முருகன் கோவில்: ரூ.38 லட்சம் உண்டியல் காணிக்கை

சோலைமலை முருகன் கோவிலில் ரூ.38 லட்சம் உண்டியல் காணிக்கையாக கிடைத்ததுள்ளது.

Update: 2023-06-02 21:23 GMT

அழகர்கோவில், 

அழகர்கோவில் மலையில் உள்ள ஆறாவது படைவீடான சோலைமலை முருகன் கோவிலில் உண்டியல் திறந்து எண்ணும் பணி அங்குள்ள சஷ்டி மண்டப வளாகத்தில் நடைபெற்றது. இதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரூ.38 லட்சத்து 2 ஆயிரத்து 825-ம், தங்கம் 32 கிராமும், வெள்ளி 1 கிலோ10 கிராமும் மற்றும் வெளிநாட்டு டாலர் நோட்டுகளும் இருந்தது. உண்டியல் திறப்பின் போது துணை ஆணையர் ராமசாமி, உதவி ஆணையர் வளர்மதி, தக்கார் பிரதிநிதி நல்லதம்பி, ஆய்வாளர் அய்யம்பெருமாள், கண்காணிப்பாளர்கள் அருட்செல்வன், பிரதீபா, மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்