பெட்ரோல் பங்க் ஊழியரிடம் பணம் பறிக்க முயன்ற 4 பேர் கைது

தேவிபட்டினத்தில் பெட்ரோல் பங்க் ஊழியரிடம் பணம் பறிக்க முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2023-07-26 00:26 IST

பனைக்குளம்.

ராமநாதபுரம் மாவட்டம் முத்து ரெகுநாதபுரத்தைச் சேர்ந்தவர் சாந்தகுமார் (வயது 54) இவர் தேவிபட்டினத்தில் பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அருகேயுள்ள ஓட்டலில் சாப்பிடுவதற்காக சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அழகன்குளம் தேவர் குடியிருப்பை சேர்ந்த கோவிந்தன், விஜய், சத்தியமூர்த்தி, கார்த்தி 4 பேரும் சாந்தகுமாரை வழி மறித்து கத்தியை காட்டி பணத்தை பறிக்க முயன்றனர். உடனே அவர் சத்தம் போட்டார். உடனே அவர்கள் தப்பி விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் தேவிபட்டினம் போலீசார் வழக்குபதிவு செய்து 4 பேரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்