45 கிலோ பாலித்தீன் பைகள் பறிமுதல்

Update:2023-09-27 01:30 IST

திண்டுக்கல்லில், தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் விற்கப்படுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து மாநகராட்சியின் சுகாதார ஆய்வாளர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டு, தினமும் கடைகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று நகர்நல அலுவலர் செபாஸ்டியன் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர்கள் காமராஜ், கேசவன், செல்வராணி ஆகியோர் மேற்கு ரதவீதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர்.

அப்போது 4 கடைகளில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் விற்பனை செய்வதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த கடைகளில் விற்பதற்கு பதுக்கி வைத்திருந்த 45 கிலோ பாலித்தீன் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த 4 கடைக்காரர்களுக்கும் ரூ.13 ஆயிரத்து 500 அபராதம் விதித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்