குடிமங்கலம் அருகே பல லட்சம் மதிப்பிலான காப்பர் வயர்கள் திருடிய வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
வயர்கள் திருட்டு
குடிமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தோட்டத்துசாலைகளில் மின் மோட்டார் வயர்கள்மற்றும் காற்றாலைகளில் காப்பர் வயர்கள் திருட்டு நடந்து வந்தது.இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள், தனியார் காற்றாலை நிறுவனத்தினர் குடிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.இந்த புகாரின் பேரில் குடிமங்கலம் போலீசார் காப்பர் வயர்கள் திருட்டில் ஈடுபடுபவர்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
குடிமங்கலம் போலீசார் நடத்திய விசாரணையில் உடுமலை அருகே கனியூரை சேர்ந்த கருப்பசாமி இவரது மகன் அரவிந்தன் (வயது 30) அதே பகுதியைச் சேர்ந்த தங்கவேல் மகன் பார்த்திபன் (30) மதிவாணன் மகன் பிரகாஷ் (23) முருகேசன் மகன் முனீஸ்வரன் (30) அரசு மகன் இனியமனாளன் (40) ஆகியோரை கைது செய்தனர்.
5பேர் கைது
குடிமங்கலம் போலீசார் நடத்திய விசாரணையில் ஒருவர் காற்றாலைகளில் பணிபுரிந்து வந்ததும் சில சமயங்களில் மற்றவர்கள் காற்றாலைகளில் வேலைக்கு சென்று வந்துள்ளனர்.
தற்போது தனித்தனியாக வேலை செய்து வருகின்றனர். காற்றாலைகள் நிறுத்தப்பட்டிருக்கும் சமயங்களில் காற்றாலைகளில் உள்ள காப்பர் வயர்களை திருடி சென்றுள்ளனர்.
மேலும் மெட்ராத்தி ஜாசர்பட்டி கொள்ளு பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காற்றாலைகளில் இவர்கள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இவர்களிடம் இருந்து திருட்டிற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம், 35 மீட்டர் காப்பர் வயர்கள், ரூ.65 ஆயிரம் பறிமுதல் செய்தனர்.