பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2023-05-29 04:15 IST

ஊட்டி, 

ஊட்டி அருகே தேனாடுகம்பை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் இடுஹட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அரசு பள்ளியின் பின்புறம் சிலர் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அதே பகுதியை சேர்ந்த சந்திரன், மகேந்திரன், சீராளன், இரியன், குமார் ஆகிய 5 பேர் என்பது தெரிய வந்தது. பின்னர் அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்