நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் தங்கநகை பறிப்பு
நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் தங்கநகை பறிப்பு;
இடிகரை
கோவை சாய்பாபாகாலனி அடுத்துள்ள பி.என்.புதூர் சுந்தரம் 4-வது வீதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி வெள்ளையம்மாள் (வயது22). சம்பவதன்று இவர் வீட்டின் அருகிலுள்ள ஜூஸ் கடைக்கு சென்றுவிட்டு திரும்பி வீட்டிற்கு நடந்து வந்து கொண்டு இருந்தபோது, இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்மநபர்கள் 2 பேர், திடீரென வெள்ளையம்மாள் கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தங்க நகையை பறித்து சென்றனர்.
இதன் மதிப்பு ரூ.1.லட்சத்து 25 ஆயிரம் ஆகும். இதுகுறித்து வெள்ளையம்மாள் சாய்பாபகாலனி போலீசில் புகார் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் ரெஜினா வழக்குப்பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்து, விசாரணை நடத்தி வருகிறார். அந்த பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இதேபோல 2 வழிப்பறிகள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.