தலைவாசல் அருகே, அரசு மேல்நிலைப்பள்ளியில் மதுகுடித்து விட்டு வகுப்புக்கு வந்த 5 மாணவர்கள் 'சஸ்பெண்டு'

தலைவாசல் அருகே, அரசு மேல்நிலைப்பள்ளியில் மதுகுடித்து விட்டு வகுப்புக்கு வந்த 5 மாணவர்கள் ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்டனர்.

Update: 2022-11-23 20:44 GMT

தலைவாசல்,

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே காட்டுக்கோட்டையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 600 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் கடந்த 19-ந் தேதி பிளஸ்-1 படிக்கும் 5 மாணவர்கள் மது குடித்துவிட்டு மது பாட்டிலுடன் வகுப்பறைக்குள் வந்துள்ளனர். இதை பார்த்த வகுப்பு ஆசிரியர் மற்றும் சக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின்னர் வகுப்பு ஆசிரியர், தலைமை ஆசிரியர் சுரேஷுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து தலைமை ஆசிரியரும், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கருப்பண்ணனும் இது தொடர்பாக விசாரித்தனர். அதன்பின்னர் பெற்றோர்களை வரவழைத்து மாணவர்கள் இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபடக்கூடாது என பெற்றோர்களிடம் எச்சரிக்கை விடுத்து எழுதி வாங்கி உள்ளனர். அதன்பின்னர் 5 மாணவர்களையும் எச்சரித்து, அறிவுரை வழங்கி வகுப்பறைக்குள் படிக்க அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் காட்டுக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி வகுப்பறைக்குள் குடிபோதையில் வந்த பிளஸ்-1 மாணவர்கள் 5 பேரை ஒரு வாரம் 'சஸ்பெண்டு' செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்