வால்பாறையில் 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

வால்பாறையில் 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்;

Update:2023-03-22 00:15 IST

வால்பாறை

வால்பாறை பகுதியில் கடந்த சில நாட்களாக பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வந்தது. இதனை தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் பாலு உத்தரவின் பேரில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் துப்புரவு மேற்பார்வையாளர்கள் அடங்கிய குழுவினர் வால்பாறை நகர் பகுதியில் உள்ள மளிகை கடை, பேக்கரிகள், பலசரக்கு கடைகள், உணவு பொருட்கள் குடோன் ஆகிய இடங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருவது கண்டு பிடிக்கப்பட்டு 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய கடைக்கார்களுக்கு ரூ.9 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் அழித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்