50ஜிபி இலவச டேட்டா - பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை

உலகக்கோப்பை கால்பந்து போட்டியை பார்க்க இலவச டேட்டா தருவதாக சமூகவலைதளங்களில் வரும் பதிவு மற்றும் போலியானது என சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2022-11-24 03:54 GMT

சென்னை,

இன்றைய காலகட்டத்தில் தினம்தோறும் பல விதமான நூதன மோசடிகள் அரங்கேறிக்கொண்டே இருக்கின்றன. எங்கு பார்த்தாலும் ஆன்லைன் என்ற நிலை உருவாகி விட்டதால் மக்கள் அதனை எளிதில் பயன்படுத்தி விடுகின்றனர். ஆனால் அதனையே சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் ஹேக்கர்கள் பலவிதமான மோசடிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இது போன்ற மோசடிகளில் மக்கள் யாரும் சிக்க வேண்டாம் எனவும் தங்களுடைய தனிப்பட்ட தகவல்களை எதற்காகவும் யாரிடமும் பகிரக்கூடாது என அரசு தரப்பிலிருந்து தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரின் தற்போது நடைபெற்ற வரும் நிலையில் சமீப காலமாக உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை காண 50 ஜிபி டேட்டா இலவசம் என்று ஒரு செய்தி சமூகவலைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது. அதனைக் குறிப்பிட்ட நபர்களுக்கு ஷேர் செய்தால் உங்களுக்கு 50 ஜிபி டேட்டா இலவசம் என அதில் குறிப்பிடப்பட்டிருப்பதால் பலரும் இதனை நம்பி அந்தச் செய்தியை வெகுவாக பரப்பி வருகிறார்கள்.

இந்நிலையில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை காண 50 ஜிபி டேட்டா இலவசம் என்று வரும் லிங்கை ஓபன் செய்ய வேண்டாம் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

50 ஜிபி டேட்டா தருவதாக கூறும் ஆசைவார்த்தைகளை நம்பி, எந்த இணைப்பையும் கிளிக் செய்யாதீர்கள் என்றூம் அவ்வாறு செய்தால் உங்கள் செல்போன் ஹேக் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக பொதுமக்களுக்கு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்