மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 57 மனுக்கள் பெறப்பட்டது

ஊட்டியில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 57 மனுக்கள் பெறப்பட்டது.

Update: 2022-05-23 15:55 GMT

ஊட்டி

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்  நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 57 மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்த மனுக்கள் மீது துறை அலுவலர்கள் தனி கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

உரிய காரணம் இன்றி மனுக்களை நிராகரிக்கக்கூடாது. பொதுமக்களின் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தனப்ரியா உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் குறைந்த மக்கள் மட்டுமே மனு அளிக்க வந்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்