5,742 மதுபாட்டில்கள் அழிப்பு

5,742 மதுபாட்டில்கள் அழிப்பு;

Update:2023-03-18 00:12 IST


விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், ஆகிய பகுதிகளில் மதுவிலக்கு பிரிவு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 5,742 மது பாட்டில்களை அழிப்பதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு சீனிவாச பெருமாள் உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட தொழில் மையத்திற்கு பின்புறம் இந்த மது பாட்டில்களில் உள்ள மதுவினை கீழே ஊற்றி அழித்தனர். அப்போது கலால் துறை உதவி ஆணையர் அமிர்தலிங்கம், மதுவிலக்கு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் ஆகியோர் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்