விதிகளை மீறிய 6 கடைக்காரர்களுக்கு அபராதம்
விதிகளை மீறிய 6 கடைக்காரர்களுக்கு அபராதம்;
கிணத்துக்கடவு,
கிணத்துக்கடவு பகுதியில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சிகரெட் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் நேற்று கிணத்துக்கடவில் கோவை-பொள்ளாச்சி மெயின் ரோடு, ஆர்.எஸ். ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சித்ரா தலைமையில் மேற்பார்வையாளர் ராஜவேலு மருத்துவமில்லா மேற்பார்வையாளர் கண்ணன், சுகாதார ஆய்வாளர்கள் குணசேகரன், சரவணகுமார் ஆகியோர் கொண்ட குழுவினர் தீவிரமாக சோதனையிட்டனர். அப்போது சுகாதாரத்துறையினரின் விதிமுறைகளை மீறிய 6 கடைக்காரர்களுக்கு ரூ.1,200 அபராதம் விதிக்கப்பட்டது.