மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 72,562 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 72,562 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது

Update: 2022-06-30 18:06 GMT

திருப்பத்தூர் அரசு பொது மருத்துவமனைகளில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் மற்றும் அவர்கள் உறவினர்கள் அனைவருக்கும் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்கள், பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்களின் இல்லத்திற்கே நேரடியாகச் சென்று மருத்துவச் சேவையை அளிக்கும் பொருட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்ட மக்களைத்தேடி மருத்துவத்திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 72,562 பயனாளிகளுக்கு சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், இயன்முறை வழி மற்றும் ஆதரவு சிகிச்சை நோய்கள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளித்து பயனடைந்துள்ளனர்.

ஏழை எளியோர் வாழும் இடத்திலேயே சிறப்பு மருத்துவச் சேவை அளிக்கும் கலைஞர் வரும் முன் காப்போம் திட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் துவக்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் நோய்கள் வரும்முன் அதனைத் தடுக்கும் பொருட்டு கடந்த ஓராண்டில் 18 முகாம்கள் நடத்தப்பட்டு சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் இயன்முறை வழி மற்றும் ஆதரவு சிகிச்சை நோய்களுக்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு 10,963 எண்ணிக்கையிலான பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்