லாட்டரி சீட்டுகள் விற்ற 8 பேர் கைது

லாட்டரி சீட்டுகள் விற்ற 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-09-12 19:42 GMT

துவரங்குறிச்சி:

துவரங்குறிச்சி பகுதியில் தனிப்படை போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது 2 கடைகளில் சட்ட விரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த கடைகளில் இருந்து 8 பேரை தனிப்படை போலீசார் பிடித்து துவரங்குறிச்சி போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள், கருமலையை சேர்ந்த அழகர்(வயது 52), துவரங்குறிச்சி அர்ஜுன காலனியை சேர்ந்த பால்பாண்டியன்(25), பாண்டி(27), காட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கார்த்தி(26), காட்டூர் பாண்டியன் நகரை சேர்ந்த அலெக்சாண்டர்(53), ஆர்.பாலக்குறிச்சியை சேர்ந்த கண்ணன்(40), நடராஜபுரம் பகுதியை சேர்ந்த மருதீஸ்வரன்(32), தாராநல்லூரை சேர்ந்த முகமது ரபீக்(23) என்பது தெரியவந்தது. இது குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டு, 8 செல்போன்கள், ரூ.81,200-ஐ பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்