முயல் வேட்டையாடிய 8 பேருக்கு அபராதம்

கடையம் அருகே முயல் வேட்டையாடிய 8 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.;

Update:2023-07-06 23:27 IST

கடையம்:

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பை கோட்டம் கடையம் வனச்சரகம் ஆம்பூர் பீட் வெளிமண்டல பகுதியில் வனச்சரக களப்பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு முயல் வேட்டையாடியதாக 8 பேரை வனத்துறையினர் பிடித்தனர். விசாரணையில், அவர்கள் அயன்திருவாலீஸ்வரத்தைச் சேர்ந்த பாலமுருகன் (வயது 46), மாரியப்பன் (42), பிச்சையா (74), முத்துபாண்டி (51), மாரியப்பன் (48), சுப்பையா (53), கல்யாணசுந்தரம் (51), ஆறுமுகம் (73) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அம்பை கோட்ட துணை இயக்குனர் செண்பகப்பிரியா உத்தரவின்படி, 8 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சம் அபராதம் விதித்து வசூலித்தனர். இதில் தொடர்புடைய மேலும் சிலரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்