10 அடி நீள மலைப்பாம்பு பிடிப்பட்டது

ஆம்பூர் அருகே 10 அடி நீள மலைப்பாம்பு பிடிப்பட்டது.;

Update:2022-10-22 19:38 IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மிட்டாளம் ஊராட்சி பைரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவருக்கு சொந்தமான நிலத்தில் 10 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றதை கண்ட அப்பகுதி மக்கள் ஆம்பூர் வனச்சரக அலுவலர் சங்கரய்யாவுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனக்காப்பாளர் மூர்த்தி மற்றும் வனத்துறையினர் மலைப்பாம்பை பிடித்து அருகே உள்ள வனப்பகுதியில் விட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்