சென்னை விமான நிலையத்தில் 28 இண்டிகோ விமானங்கள் ரத்து
வழக்கமான விமான கட்டணம் வசூலிக்கப்படுவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.;
மீனம்பாக்கம்,
நாடு முழுவதும் உள்நாட்டு விமான சேவைகளில் தொழில்நுட்ப கோளாறு மற்றும் விமான பணி நேர வரம்பு காரணமாக விமானிகள், விமான பணியாட்கள் இல்லாததால் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவன விமான சேவைகள் கடந்த 8 நாட்களாக பெரிதும் பாதிக்கப்பட்டன.
இந்த நிலையில், 9-வது நாளாக இன்று சென்னை விமான நிலையத்தில் 28 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 14 புறப்பாடு, 14 வருகை விமானங்கள் என மொத்தம் 28 இண்டிகோ விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரத்து செய்யப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால், பயணிகள் நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் வழக்கமான விமான கட்டணம் வசூலிக்கப்படுவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் ஓரிரு நாளில் சகஜ நிலைக்கு திரும்பி வழக்கமான விமான சேவைகள் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.