அதிமுக செயற்குழு,பொதுக்குழு கூட்டம் தொடங்கியது
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சற்று நேரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச உள்ளார்.;
சென்னை,
சட்டசபை தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. தீவிரமாக தயாராகி வருகிறது. இதையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்துள்ளார்.இந்த நிலையில் அ.தி.மு.க. செயற்குழு-பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதன்படி, அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் சென்னையில் காலை 10 மணியளவில் கூடியது. இந்த செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில், மாநில, மாவட்ட நிர்வாகிகள் என 4 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த பொதுக்குழு கூட்டம் நடக்க இருப்பதால் இந்த கூட்டம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.