கரூர் தவெக கூட்ட நெரிசலில் இறந்த 41 பேருக்கு அதிமுக பொதுக்குழுவில் இரங்கல்
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.;
சென்னை வானகரத்தில் நடைபெற்று வரும் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் மறைந்த தலைவர்களுக்கும், கட்சி நிர்வாகிகள் மறைவுக்கும் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை முன்னாள் அமைச்சர் செம்மலை வாசித்தார்.
தீர்மானத்தில் முக்கியமாக, மறைந்த முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் மூத்தமகன் மு.க.முத்துவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதேபோல், கரூர் தவெக கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கும், மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் வாழ்நாள் உதவியாளர் மகாலிங்கம் மறைவுக்கும், மூத்த நடிகை சரோஜாதேவிக்கும், நாகாலாந்து கவர்னராக இருந்து மறைந்த இல.கணேசனுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.