10 அடி நீள மலைப்பாம்பு பிடிப்பட்டது
ஆம்பூர் அருகே 10 அடி நீள மலைப்பாம்பு பிடிப்பட்டது.;
ஆம்பூரை அடுத்த கதவாளம் பகுதியில் 10 அடி நீள மலைப்பாம்பு ஊர்ந்து சென்றதை கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மலைப்பாம்பை பிடித்து அருகே உள்ள வனப்பகுதியில் விட்டனர்.