12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது

வள்ளியூர் அருகே 12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது;

Update:2023-03-23 00:15 IST

வள்ளியூர் (தெற்கு):

வள்ளியூரில் இருந்து ஏர்வாடி செல்லும் சாலையில் மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. இதை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள், வாகன ஓட்டிகள், பாம்புகள் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர். சுமார் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பேரிடர் மேலாண்மை பாம்புகள் மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் அலெக்ஸ் செல்வன் லாவகமாக பிடித்து வனஅதிகாரி யோகேஸ்வரன் தலைமையிலான வனகாவலர்கள் செல்வமணி மற்றும் அண்ணாதுரை ஆகியோரிடம் ஒப்படைத்தார். பின்னர் மலைப்பாம்பு திருக்குறுங்குடி வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்