கிறிஸ்துமஸ் பண்டிகை: பெங்களூருவில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக கொல்லத்திற்கு சிறப்பு ரெயில்
இந்த சிறப்பு ரெயில் நாளை கொல்லத்தை சென்றடைகிறது.;
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்க பெங்களூருவில் இருந்து கொல்லத்திற்கு இன்று (23-ந் தேதி) இரவு 11 மணிக்கு சிறப்பு ரெயில் (வண்டி எண் 06577) இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரெயில் நாளை மாலை 4 மணிக்கு கொல்லத்தை சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில், கொல்லத்தில் இருந்து நாளை (புதன்கிழமை) மாலை 6.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06578) மறுநாள் காலை 11 மணிக்கு பெங்களூருவை சென்றடைகிறது. இந்த சிறப்பு ரெயில் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக இயக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.