9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்

சின்னசேலம் அருகே 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் போக்சோ சட்டத்தில் தந்தை கைது

Update: 2022-10-09 18:45 GMT

கள்ளக்குறிச்சி

சின்னசேலம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 9-வயது சிறுமி தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறாள். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனியாக இருந்த சிறுமியை அவளது தந்தை படுக்கை அறைக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் சிறுமி அழுதபடி நடந்த சம்பவத்தை அவளது தாயிடம் கூறினாள். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் தந்தை மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்