பெட்டிக்கடையில் தகராறில் ஈடுபட்டவர் மீது வழக்கு

பெட்டிக்கடையில் தகராறில் ஈடுபட்டவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.;

Update:2023-05-05 01:13 IST

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே ஸ்ரீபுரந்தான் காலனி தெருவை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மனைவி ஜெயந்தி (வயது 29). அதே பகுதியை சேர்ந்தவர் சரவணன் (35). ஜெயந்தியின் மாமனார் குடும்பத்திற்கும், சரவணனின் உறவினர் குடும்பத்திற்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று ஜெயந்தியின் பெட்டிக்கடைக்கு சென்ற சரவணன் ஜெயந்தியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி அங்கிருந்த மிட்டாய் பாட்டில்களை உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜெயந்தி அளித்த புகாரின் பேரில் விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்