பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு

பெண்ணை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.;

Update:2023-08-26 00:52 IST

அரிமளம் ஒன்றியம் பெருங்குடி அருகே உள்ள வளைய பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜோசப். இவருடைய மனைவி திரவியம் மேரி (வயது 43). இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த அடைக்கலம் என்பவருக்கும் இடையே கடந்த 10 ஆண்டுகளாக புறம்போக்கு நிலம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று திரவியம் மேரியை அடைக்கலம் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த திரவியம் மேரி புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து திரவியம் மேரி கொடுத்த புகாரின் பேரில் அரிமளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதேபோல் அடைக்கலம் தாயார் சபரி அம்மாள் கொடுத்த புகாரின் பேரில் ஜோசப், அவரது மனைவி திரவியம் மேரி, மகன் அலெக்ஸ், மகள் அமளி ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்