மயானத்திற்கு செல்ல சிமெண்டு சாலை அமைக்க வேண்டும்

கூத்தம்பாக்கத்தில் மயானத்திற்கு செல்ல சிமெண்டு சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update:2023-09-22 22:56 IST

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பாணாவரம் அருகே கூத்தம்பாக்கம் கிராமத்தில் ஆதிதிராவிட மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் யாராவது இறந்தால் உடலை அடக்கம் செய்ய மயானத்திற்கு செல்லும்போது சாலை வசதி இல்லாததால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

மயானத்திற்கு செல்லும் வழியை ஒட்டி மகேந்திரவாடி கால்வாய் செல்கிறது. இதனால் மழைக்காலங்களில் பாதைஓரம் மண் அரிப்பு ஏற்பட்டு மழை வெள்ளநீர் பாதையின் மேல் செல்வதால் உடலை எடுத்து செல்லும்போது பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

எனவே அப்பகுதியில் வெள்ளத் தடுப்பு சுவருடன் கூடிய சிமெண்டு சாலை அமைத்து தருமாறு பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்