இறந்த மாணவரின் பெற்றோருக்கு ரூ.3 லட்சத்துக்கான காசோலை

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்து இறந்த மாணவரின் பெற்றோருக்கு ரூ.3 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.;

Update:2023-08-27 00:15 IST

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் தலையுடையவர்கோவில்பத்து கிராமம் கருவிழந்தநாதபுரம் வடக்கு தெருவை சேர்ந்த தனியார் பள்ளி மாணவன் ரிஷிபாலன் (வயது 17). பள்ளி ஓட்டப்பந்தயப் போட்டியில் பங்கேற்றபோது மயங்கி விழுந்து எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். இறந்த மாணவரின் பெற்றோருக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டார். இதனையடுத்து ரூ.3 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வழங்கி ஆறுதல் கூறினார். அப்போது சீர்காழி உதவி கலெக்டர் அர்ச்சனா, தரங்கம்பாடி தாசில்தார் சரவணன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்