கார் உதிரிபாகங்களை ஏற்றிச்சென்ற கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து

பள்ளிகொண்டா அருகே கார் உதிரிபாகங்களை ஏற்றிச்சென்ற கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Update: 2022-11-30 16:18 GMT

பெங்களூருவில் இருந்து கார் என்ஜின் உதிரிபாகங்களை ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. வேலூர் மாவட்டம்  பள்ளிகொண்டா அருகே உள்ள கந்தனேரி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி அருகில் உள்ள சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் உயிர் தப்பினார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பள்ளிகொண்டா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் விலை உயர்ந்த கார் என்ஜின் உதிரி பாகங்கள் கன்டெய்னர் லாரியில் இருப்பதால் போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்