ஆனைமலை அருகே வெள்ளத்தில் சிக்கி விவசாயி பலியானார்.
ஆனைமலை அருகே வெள்ளத்தில் சிக்கி விவசாயி பலியானார்.;
ஆனைமலை
ஆனைமலை அருகே வெள்ளத்தில் சிக்கி விவசாயி பலியானார்.
ஆற்றில் வெள்ளப்பெருக்கு
கோவை மாவட்டம் ஆனைமலை, வால்பாறை தாலுகா மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தென்மேற்கு பருவமழை கடந்த ஒரு மாதமாக பெய்து வருகிறது. தொடர் மழையால் ஆழியார் அணை நிரம்பியது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி நேற்று முன்தினம் அணையில் இருந்து 11 மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது.
ஆனைமலையை அடுத்த காளியப்பன் கவுண்டன் புதூரில் உள்ள தரைமட்ட பாலம் வழியாக செல்லும் ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் வழக்கத்தை விட அதிகமாக சென்றது. அப்போது அதே பகுதியை சேர்ந்த விவசாயியான சந்திரசாமி (வயது 70) என்பவர் மோட்டார் சைக்கிளில் தரைமட்ட பாலத்தை வெள்ளத்தின் நடுவே கடந்து செல்ல முயன்றார்.
விவசாயி பலி
அப்போது அவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். வெள்ளத்தில் இருந்து தப்பிக்க முயற்சித்தும் பலன் அளிக்கவில்லை. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் ஆனைமலை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சந்திரசாமியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
காளியப்பன் கவுண்டன் புதூர் தரைமட்ட பாலத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள பூச்சனாரி ஆழியாற்றில் சந்திரசாமியை பிணமாக மீட்டனர். தொடர்ந்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.