மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதியதில் விவசாயி பலி

மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதியதில் விவசாயி பலியானார்.;

Update:2022-10-26 00:44 IST

சமயபுரம், அக்.26-

சிறுகனூர் அருகே உள்ள ரெட்டிமாங்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 40). விவசாயியான இவர் நேற்று முன்தினம் தீபாவளியையொட்டி அளவுக்கு அதிகமாக மது அருந்திக்கொண்டு மோட்டார் சைக்கிளில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தச்சங்குறிச்சி பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த அவர் மோட்டார் சைக்கிளுடன் சாலையோர புளியமரத்தில் மோதினார். இதல் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் சிறப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்