விதிமுறைகளை மீறிய வாகனங்களுக்கு ரூ.3 லட்சம் அபராதம்

Update:2023-08-12 01:35 IST

சங்ககிரி:-

சங்ககிரி வட்டார போக்குவரத்து துறை அலுவலர் சுப்பிரமணியன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் புஷ்பா, செந்தில்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் சங்ககிரி வட்டார பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது தகுதி சான்று இல்லாத கல்லூரி வாகனம், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி சென்ற வாகனம், பர்மிட் இல்லாமல் இயக்கிய வாகனம், அதிகாரம் பாரம் ஏற்றி வந்த வாகனம் உள்ளிட்ட 170 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 31 வாகனங்களுக்கு ரூ.3 லட்சத்து 32 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டு அபராத தொகை வசூலிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்