சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கம் அருகே மார்க்கெட் பகுதியில் தீ விபத்து

கடையின் மீது ராக்கெட் வெடி விழுந்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.;

Update:2023-11-12 23:33 IST

சென்னை,

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தின் அருகே உள்ள மார்க்கெட் பகுதியில், தார்பாய் கடையில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அருகில் இருக்கும் கடைகளுக்கும் தீ மளமளவென பரவியது.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், துரிதமாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். முன்னதாக ராக்கெட் வெடி ஒன்று கடையின் மீது விழுந்ததாகவும், அதிலிருந்து தீப்பற்றி எரியத் தொடங்கியதால் தீ விபத்து ஏற்பட்டதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.


Full View

Tags:    

மேலும் செய்திகள்