விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா

காமயகவுண்டன்பட்டி அரசு பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.;

Update:2022-09-04 21:19 IST

கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கஸ்தூரி பாஸ்கரன் முன்னிலை வகித்தார். ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. மகாராஜன் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். நிகழ்ச்சியில், பேரூராட்சி செயல் அலுவலர் மல்லிகா, பள்ளி தலைமை ஆசிரியர் முருகேசன், பேரூராட்சி கவுன்சிலர்கள் வெற்றிசெல்வி முத்து வீரப்பன், சீனிவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்