நண்பர் மனைவியை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பலாத்காரம்

நண்பர் மனைவியை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பலாத்காரம்;

Update:2022-07-05 19:01 IST

கோவை, ஜூலை

நண்பர் மனைவியை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பலாத்காரம்

கோவை சவுரிபாளையம் பிரிவு பகுதியை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவர் கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எனக்கும், எனது கணவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். எனது கணவர் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். நானும் எனது கணவருடன் சேர்ந்து தொழில் செய்து வந்தேன். எங்களது கடைக்கு போத்தனூரை சேர்ந்த சென்னை மற்றும் கோவையில் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் எனது கணவரின் நண்பரான சங்கர் (வயது 35) என்பவர் அடிக்கடி கடைக்கு வந்து சென்றார்.

அப்போது எனக்கும், சங்கருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. எனது கணவர் இல்லாத நேரத்தில் கடைக்கு வரும் அவர் என்னுடன் நட்பாக பழகினார். ஒருநாள் என்னை ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து நாங்கள் ஒன்றாக சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டோம். அதன் பின்னர் இந்த புகைப்படத்தை எனது கணவரிடம் காண்பித்து விடுவேன் என என்னை மிரட்டினார். மேலும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை காண்பித்து மீண்டும் ஓட்டலுக்கு வருமாறு என்னை வற்புறுத்தினார். நானும் பயந்து போய் ஓட்டலுக்கு சென்றேன். அங்கு என்னை அவர் மிரட்டி வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார்.

வாலிபர் மீது வழக்கு

மேலும் உல்லாசமாக இருந்ததை எனக்கு தெரியாமல் செல்போனில் வீடியோ எடுத்து வைத்துள்ளார்.

பின்னர் உனது கணவரை விவாகரத்து செய்து விடு, நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என என்னிடம் ஆசை வார்த்தை கூறினார். இதை உண்மை என நம்பிய நான் எனது கணவரிடம் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தேன். தற்போது இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

மேலும் சங்கர் தொடர்ந்து என்னிடம் திருமணம் செய்வதாக உறுதியளித்து பலமுறை என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். நான் வர மறுத்தால் ஒன்றாக இருக்கும் ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவதாக மிரட்டி வருகிறார். என்னை மிரட்டி என்னிடம் இருந்து பல்வேறு கால கட்டங்களில் நகை மற்றும் பணத்தை பெற்று உள்ளார். தற்போது அவர் என்னை திருமணம் செய்ய மறுக்கிறார். எனவே என்னை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து பணம் மற்றும் நகைகளை பெற்று ஏமாற்றிய சங்கர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

புகாரின் பேரில் இளம் பெண்ணை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து பாலியல் பலாத்காரம் செய்து நகை மற்றும் பணத்தை பெற்று ஏமாற்றிய சங்கர் மீது நம்பிக்கை மோசடி உள்பட 3 பிரிவுகளின் கீழ் இன்ஸ்பெக்டர் தவுலத்நிஷா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் தலைமறைவாக உள்ளே அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேர்தல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்