கள்ளக்குறிச்சியில்மனநலம் பாதித்து குணமடைந்தவர், குடும்பத்தில் ஒப்படைக்கப்பட்டார்

கள்ளக்குறிச்சியில் மனநலம் பாதித்து குணமடைந்தவர், குடும்பத்தில் ஒப்படைக்கப்பட்டார்.;

Update:2023-05-22 00:15 IST


கள்ளக்குறிச்சி அருகே ஆலத்தூரில் தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கட்டுப்பாட்டில் புனித அன்னாள் மன நல காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியை சேர்ந்த செல்வம் என்கிற பழனிச்சாமி (வயது 43) என்பவர் , மன நலம் பாதிக்கப்பட்டு 11 ஆண்டுகளாக தங்கி, சிகிச்சை பெற்று வந்தார்.

அதில் தற்போது குணமடைந்த பழனிச்சாமியை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு, அவருடைய தங்கை செல்வியிடம் கலெக்டர் ஷ்ரவன்குமார் ஒப்படைத்தார். அப்போது மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்