அரக்கோணம்: அடி பம்ப்பை அகற்றாமல் தெரு அமைத்த நகராட்சி ஒப்பந்ததாரர்

அரக்கோணம் நகராட்சியில் அடி பம்ப்பை அகற்றாமல் பிளாவர் பிளாக் தெரு அமைத்த நகராட்சி ஒப்பந்ததாரர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.;

Update:2022-09-11 03:57 IST

அரக்கோணம்:

அரக்கோணம் நகராட்சி 18-வது வார்டில் உள்ள சுவால்பேட்டை தாசில்தார் குறுக்கு தெருவில் நகராட்சி சார்பில் பிளாவர் பிளாக் அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது நகராட்சி ஒப்பந்ததாரர் அந்த தெருவில் இருந்த குடிநீர் அடி பம்ப்பை சேர்த்து பிளாவர் பிளாக் கொண்டு அமைத்ததை கண்ட பொது மக்கள் நகராட்சி பொறியாளர் ஆசிர்வாதமிடம் புகார் அளித்தனர்.

இதனை உடனடியாக சரி செய்து தருவதாக கூறி நகராட்சி ஊழியர்களை அனுப்பி வைத்து அந்த தெருவில் இருந்த குடி நீர் அடி பம்ப்பை நகராட்சி ஊழியர்கள் சீர் அமைக்கும் பணியில் ஈடுபட்டு சரி செய்தனர். ஏற்கெனவே வேலூரில் சாலையில் இருந்த அடி குழாய், பைக், கார் உள்ளிட்டவற்றை அகற்றாமல் அப்படியே சாலை போடப்பட்ட நிலையில், அரக்கோணத்திலும் இது போன்ற சம்பவம் நடைபெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது போன்று அலட்சியமாக செயல்படும் ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்