முகநூலில் அரிவாள்- கத்தியுடன் புகைப்படம் பதிவிட்டவர் கைது

மூலைக்கரைப்பட்டி அருகே முகநூலில் அரிவாள்- கத்தியுடன் புகைப்படம் பதிவிட்டவரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-08-01 00:26 IST

இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள சின்ன மூலைக்கரையை சேர்ந்தவர் பண்டாரம் மகன் ராமசுப்பு (வயது 22). கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவர் தனது செல்போனில் இன்ஸ்டாகிராம் முகநூல் பக்கத்தில் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களுடன் புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். இதனை அறிந்த மூலைக்கரைப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்தி நடராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ராமசுப்புவை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்