கத்தியுடன் சுற்றி திரிந்தவர் கைது

எஸ்.பி.பட்டினத்தில் கத்தியுடன் சுற்றி திரிந்தவர் கைது செய்யப்பட்டார்.;

Update:2022-08-21 23:07 IST

தொண்டி,

திருவாடானை தாலுகா எஸ்.பி.பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காளீஸ்வரன் மற்றும் போலீசார் குற்றத்தடுப்பு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பள்ளிவாசல் தெருவில் சென்ற ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனை செய்த போது அவரிடம் கத்தி இருப்பது தெரிய வந்தது. அதோடு போலீசாரை அவதூறாக பேசி உள்ளார். இதையடுத்து அவரை கைது செய்தனர்.

விசாரணையில் நம்புதாளையைச் சேர்ந்த அப்துல் ஜப்பார் (வயது 24) என்பதும் அவருக்கும் எஸ்.பி. பட்டினத்தைச் சேர்ந்த சகுபர் சாதிக் என்பவருக்கும் உள்ள சொத்து தகராறு காரணமாக அவரை கொலை செய்வதற்கு அப்பகுதியில் உள்ள பட்டறையில் கத்தியை தீட்டுவதற்காக சென்றது தெரிய வந்துள்ளது. மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் அதனை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்