மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் மின்வாரிய ஊழியர் பலி

வாணியம்பாடி அருகே ேமாட்டார்சைக்கிள் மீது கார் மோதியதில் மின்வாரிய ஊழியர் பலியானார். அவரது உடல் 200 மீட்டர் தூரம் இழுத்துச்செல்லப்பட்டது.;

Update:2023-08-30 00:23 IST

மின் ஊழியர்

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 55). இவர் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த கேத்தாண்டபட்டி பகுதியில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வந்தார்.

நேற்று இவர் மோட்டார் சைக்கிளில் பணிக்கு புறப்பட்டார். வாணியம்பாடி அருகே புதூர் பகுதியில் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அவர் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மின்வாரிய ஊழியர் தாமோதரனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தாமோதரன் அந்த இடத்திலேயே பலியானார். அவரது உடலை 200 மீட்டர் தூரம் இழுத்துச்செல்லப்பட்ட பின்னரே கார் நின்றது.

போலீசார் விசாரணை

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாணியம்பாடி நகர போலீசார் தாமோதரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் காரை ஓட்டி வந்த பரத் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்