திருமணமாகாத விரக்தியில் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

திருமணமாகாத விரக்தியில் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2023-10-15 00:15 IST

விக்கிரவாண்டி தாலுகா அரியலூர்திருக்கை கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல் மகன் உதயகுமார் (வயது 30). இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணம் வசூலிப்பவராக பணியாற்றி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நீண்ட நாட்களாக திருமணமாகாத மன உளைச்சலில் இருந்து வந்த உதயகுமார், நேற்று கருங்காலிப்பட்டு கல்குவாரி அருகே உள்ள ஒரு வேப்ப மரத்தில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்த புகாரின்பேரில் காணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்