கிராம ஊராட்சிகளுக்கு எலக்ட்ரிக் ஆட்டோக்கள் வழங்கும் நிகழ்ச்சி

ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம ஊராட்சிகளுக்கு எலக்ட்ரிக் ஆட்டோக்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2023-06-05 09:30 GMT

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்  2022-23-ம் நிதி ஆண்டில் தூய்மை பாரத இயக்க திட்டத்தின் மூலம் ஆரணி ஊராட்சி ஒன்றியத்திற்கு 35 எலக்ட்ரிக் ஆட்டோக்கள் வழங்கப்பட்டுள்ளன.

அந்த ஆட்டோக்களை தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஒன்றியக்குழு தலைவர் கனிமொழி சுந்தர் தலைமையில் நடைபெற்றது.துணைத்தலைவர் கே.டி.ராஜேந்திரன், உறுப்பினர்கள் குமார், எழிலரசிசுகுமார், வி.பி.செல்வராஜ், பரிமளா கருணாகரன், ஏ.எம்.ரஞ்சித், புனிதாஅலெக்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பிரபாகரன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் எஸ்.வி.நகரம், சித்தேரி, பையூர், கல்பூண்டி, அக்ராபாளையம், விளை, வேடப்பாடி, அரியப்பாடி, 12புத்தூர், ராட்டினமங்கலம், சேவூர் உள்பட 13 ஊராட்சிகளுக்கு முதற்கட்டமாக 18 எலக்ட்ரிக் ஆட்டோக்களை தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் அக்ராபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் தாட்சாயணி அன்பழகன், வேடப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் சிவலிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்